ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

18 views
1 min read
erode

 

ஈரோடு மாவட்டத்தில் வெப்பம் சலனம் காரணமாக மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது, அதன்படி கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.  

இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் லேசாக பெய்ய தொடங்கிய மழை, நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. 

இதேபோல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 45.4 மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதைப்போல் பெருந்துறை தாளவாடி குண்டேரிப்பள்ளம் போன்ற பகுதியில் மிதமான மழை பெய்தது. 

ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு – 30, வரட்டு பள்ளம் – 45.4, குண்டேரிபள்ளம் 18.2, பெருந்துறை 18, தாளவாடி அம்மாபேட்டை 6.6, கோபி 4.2, கவுந்தப்பாடி 3.6, கொடுமுடி 1.6, பவானி 1.4.
 

TAGS
rains

Leave a Reply