ஈரோடு மாவட்டத்தில் பரவலான மழை

7 views
1 min read
Erode_Rain

ஈரோடு மாவட்டத்தில் பரவலான மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில், ஈரோடு மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 20மில்லி மீட்டர்மழை பதிவானது.

இதேபோல், மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: ஈரோடு-5, கோபி-2, பெருந்துறை-8.2, பவானி-2.4, கொடுமுடி-2.2, கவுந்தப்பாடி-2.2, எலந்தகுட்டை-2.4, அம்மாபேட்டை-20, மொடக்குறிச்சி-12, வரட்டுப்பள்ளம்-4.6, கொடிவேரி-1 என மாவட்டத்தில் மொத்தம் 62மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.

TAGS
Erode

Leave a Reply