ஈரோட்டில் ஏபிஜே அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

7 views
1 min read
erd

இந்திய நாட்டின் குடியரசு முன்னாள் தலைவரும் மேதகு ஏபிஜே அப்துல் கலானின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு கல்லூரியின் சேர்மேன் டாக்டர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் வாரிசான அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டும் அஞ்சலி செலுத்தினார். அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஐயாவின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

TAGS
erode APJ Abdul Kalam

Leave a Reply