உத்தமபாளையத்தில் பொது முடக்கம் எதிரொலி: பெட்ரோல் நிலையம் உட்பட பெரும்பான்மையான கடைகள் மூடல்

14 views
1 min read
theni

தேனி மாவட்டம், உத்தமபாளையம் சின்னமனூர் என சுற்றுவட்டாரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டாவது பொது முடக்கம் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து மருத்துவமனை, மருந்துக்கடைகள் மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற வணிக நோக்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 

ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக இயங்கும் இறைச்சி மீன் கடைகளும் முக்கியமாக பெட்ரோல் நிரப்பும் நிலையம், உணவகங்கள் என பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டன. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களும் வெளியிடங்களுக்கு வருவதை குறைத்து குரன் ஆர் நோய்தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். 

உத்தமபாளையம், சின்னமனூர் பகுதி பிரதான சாலைகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொள்கின்றனர்.
 

TAGS
Curfew uthamapalayam

Leave a Reply