உயரமான கணவர் வேண்டும்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்

15 views
1 min read
rakul_preet5122xx

 

தனக்கு உயரமான கணவர் வேண்டும் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு பேட்டியில் அவர் காதல், கணவர் பற்றி கூறியதாவது:

தற்போது நான் நிறைய மாறிவிட்டேன். முன்பு இருந்தவள் இப்போது கிடையாது. பரிசுத்தமான அன்பை என் பெற்றோரிடம் காண்கிறேன். திருமணம், காதல் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. அவை மிக அழகானவை. ஆனால் இவற்றை ஏன் அழுத்தமான ஒன்றாகச் சிலர் பார்க்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒருவரைக் காதலிக்கும்போது முழு மனத்துடன் காதலியுங்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் தான் நான்.

ஓர் ஆணிடம் நான் எதிர்பார்ப்பது, அவர் உயரமாக இருக்கவேண்டும் என்பதுதான். நான் ஹீல்ஸ் அணிந்திருந்தாலும் அவரை அண்ணார்ந்துதான் நான் பார்க்கவேண்டும். புத்திசாலித்தனமாகவும் வாழ்க்கையில் ஒரு லட்சியம் கொண்டவராகவும் அவர் இருக்கவேண்டும் என்றார்.

=

TAGS
Rakul Preet

Leave a Reply