உறவினர் திருமணத்திற்கு அழைத்து செல்லாததால் பள்ளி மாணவி தற்கொலை

19 views
1 min read
suicide

கோப்புப் படம்

உறவினர் திருமணத்திற்கு அழைத்து செல்லாததால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சீர்காழி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீர்காழியை அடுத்த அரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கீர்த்தனா(17). கொண்டல் அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று உறவினர் திருமணத்திற்கு சென்ற அவரது பெற்றோருடன் தானும் வர வேண்டும் என கூறியுள்ளார். 

ஆனால் பெற்றோர் வீட்டிலேயே இருக்க கூறிவிட்டு திருமணத்திற்கு சென்றனராம். அப்போது உள்பக்கம் பூட்டியிருந்த வீட்டிற்குள் நீண்ட நேரம் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கீர்த்தனா தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து ராஜேந்திரன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
 

TAGS
suicide தற்கொலை

Leave a Reply