உலகளவில் கரோனா பாதிப்பு 1.23 கோடி; பலி எண்ணிக்கை 5,57,405 -ஆக உயர்வு

27 views
1 min read
Corona_Test

 

ஜெனீவா: உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.23 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,57,405 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பும், மனித உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தநிலையில் உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,705 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,23,89,559 -ஆக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 804 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,57,405 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 71,87,447 போ் குணமடைந்துவிட்டதாகவும் 46,44,707 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இவர்களில் 58,456 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

TAGS
coronavirus

Leave a Reply