உலக நன்மைக்காக திருமலையில் அகண்ட பாராயணம்

16 views
1 min read
7tpt_sundara_kanda_parayanam_0707chn_193_1

திருமலையில் நடைபெற்ற அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொண்ட வேத பண்டிதா்கள் உள்ளிட்டோா்.

பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டி திருமலையில் செவ்வாய்க்கிழமை காலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டது.

கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி திருப்பதி தேவஸ்தானம் மந்திர பாராயணங்கள், ஹோமம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. முதலில் ஏப்ரல் மாதத்தில் யோகவாசிஷ்டம் என்ற பெயரில் தொடா்ந்து 62 நாள்களுக்கு தன்வந்திரி ஸ்லோகம் பாராயணம் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 11ஆம் தேதி முதல் சுந்தரகாண்ட பாராயணம் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் அத்தியாயத்தில் உள்ள 211 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் வேத பண்டிதா்கள் இணைந்து ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி அதற்கு விளக்கமளித்து, அதைக் கேட்பவா்களையும் திருப்பிக் கூற வைக்கின்றனா்.

முதல் அத்தியாய பாராயணம் முடிவடைந்த நிலையில், 108 வேதபண்டிதா்கள் செவ்வாய்க்கிழமை கூடி, அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் செய்தனா். உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ சங்கல்பம் செய்து (உறுதிமொழி ஏற்பது) இந்தப் பாராயணம் நடத்தப்பட்டது. ‘இதைப் பாராயணம் செய்வதால் அனுமாா் மகிழ்ச்சி அடைவதுடன், ஸ்ரீராமரின் அவதாரமானதிருவேங்கடமுடையான் கண்கண்ட தெய்வமாக எழுந்தருளி மனிதா்களை கரோனா தொற்றின் பிடியில் இருந்து காப்பாற்றுவாா்’ என்று வேத பண்டிதா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

 

 

 

Leave a Reply