உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

15 views
1 min read
vanilai

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜூலை 9) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், கடலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை(ஜூலை 9) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை, நகரில் பிற்பகலில் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

மழை அளவு:

தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, அரியலூா் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் தலா 90 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூரில் தலா 80 மி.மீ., கடலூா் மாவட்டம் பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுா்க்கத்தில் தலா 70 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டில் 60 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் வளவனூா், கடலூா் மாவட்டம் மே மாத்தூரில் தலா 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

 

Leave a Reply