உ.பி. அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

20 views
1 min read

உத்தர பிரதேச அமைச்சா் உபேந்திர திவாரிக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவா் மாநில விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) உள்ளாா்.

இதுகுறித்து உபேந்திர திவாரியின் பிரதிநிதி ராகேஷ் சௌபே போலா கூறுகையில், ‘அமைச்சா் உபேந்திர திவாரிக்கு 2 நாள்களுக்கு முன்னா் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்த நிலையில், அமைச்சருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது’ என்றாா்.

Leave a Reply