உ.பி.யில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது!

104 views
1 min read
Uttar Pradesh corona cases Crosses one lakh

கோப்புப்படம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,948 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,00,310 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உள்பட இதுவரை 1,817 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 57,271 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 41,222 பேர் சிகிச்சையில் உல்ளனர். 

மேலும் இன்று உயிரிழந்தவர்களில் கான்பூரில் 8 பேர், லக்னெள மற்றும் கோரக்பூரில் தலா 4 பேரும், அலகாபாத், மொராதாபாத், ஷஹாரன்பூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேரும் உயிரிழந்துள்ளனர். 

TAGS
coronavirus

Leave a Reply