உ.பி.யில் சாலை விபத்து: 4 பேர் பலி, 2 பேர் காயம்

18 views
1 min read
accident

 

உத்தரப் பிரதேசம் அருகே இருசக்கர வாகனம் மீது  கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர். 

வெள்ளிக்கிழமை இரவு டிகிரி கல்லூரி அருகே வேகமாக வந்த கார் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியுள்ளதாக கோட்வாலி காவல் நிலைய காவல் அதிகாரி அதுல் குமார் சிங் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர்கள் வினய் குமார் வர்மா, சிவம் சாஹு, வினோத் மற்றும் ரூபேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் 25-30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளனர். 

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் லக்னோவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்று சிங் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பகுதியில் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

TAGS
accident

Leave a Reply