ஊத்தங்கரை அரசு தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா: கட்டடத்திற்கு பூமி பூஜை

18 views
1 min read
krishnagiri

புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1920ம் ஆண்டு தொடங்கி தற்போது 100 ஆண்டு பள்ளிக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2018-19 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டில் ரூ.9.70 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ் பூமி பூஜை செய்து பணியைத் துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தே சந்திரசேகரன், அரசு பள்ளி தலைமையாசிரியர் முருகன், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், மாவட்ட துணைத்தலைவர் சாகுல் அமீது, நகர செயலாளர் பிகே சிவானந்தம், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் வேங்கன், ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார், கே ஆர் சுப்ரமணி, ஓய்வு பெற்ற நல்லாசிரியர் தர்மலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன், நகர செயலாளர் பாபு சிவகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமானுல்லா, பாஜக நிர்வாகிகள் ஜெயராமன், சிவா, முன்னாள் அரிமா சங்கத் தலைவர் ஆர் .கே .ராஜா, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சிக்னல் ஆறுமுகம், சக்திவேல், விஜயகுமார், முன்னாள் பேரூராட்சித் தலைவர் பூபதி வட்டார செயற்பொறியாளர் செந்தில் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

TAGS
Pooja

Leave a Reply