ஊத்தங்கரை அருகே மாற்றுத் திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

24 views
1 min read
uthankarai

மிட்டப்பள்ளி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையைச் சங்க வட்டக் குழு உறுப்பினர் தங்கபாலு தலைமை வகித்தார் மாற்றுத்திறனாளிகள் பூசை, நவீன் குமார், குமார், வெங்கடேசன், உண்ணாமலை, இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் கே.எம். எத்திராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  

இதில் கரோனா நிவாரண நிதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 வழங்கக் கோரியும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக உயர்த்தி வழங்கக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

TAGS
protests

Leave a Reply