ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கோரி அறப்போராட்டம்

19 views
1 min read
araporatam

 

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கோரி ஊத்தங்கரை அதியமான் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி சங்கங்கள் அறப்போராட்டம் நடத்தினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் பள்ளி வளாகம் முன் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்ஐ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தொடர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 10000 ஆயிரம்
வாழ்வு ஊதிய சம்பளம் வழங்க கோரி சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநில துணைத் தலைவரும் அதியமான் கல்வி நிறுவனத்தின் தலைவர் சீனி,திருமால் முருகன் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது,

தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 10 இலட்சத்துக்கு அதிகமானோர் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், தனியார் பள்ளிகளின் வாழ்வாதாரங்களைக் காக்கும் பொருட்டு மாநில அளவில் உள்ள தனியார் பள்ளிகளின் பணிபுரியும் ஆசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ 10 ஆயிரம் வாழ்வு ஊதியமாக உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்,இந்த போராட்டத்தில் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

TAGS
கிருஷ்ணகிரி

Leave a Reply