ஊரடங்கை மீறிய வழக்குகளில் ரூ.17.84 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை தகவல்

16 views
1 min read
Lockdown violation: TN govt collected Rs. 17.84 crore as fine

கோப்புப்படம்

தமிழகத்தில் ஊரடங்கை மீறிய வழக்குகளில் இதுவரை ரூ.17.84 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றுவோரை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர், அதிகாரிகள் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 7,66,717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ரூ.17.84 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS
lockdown

Leave a Reply