ஊராட்சி மன்ற தலைவரிடம் காணொலி மூலம் பஞ்சாயத்து நிலைமை குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்!

17 views
1 min read
காணொலி காட்சி மூலம் பஞ்சாயத்தில் உள்ள நிலைமை குறித்து கேட்டறியும் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின். 

காணொலி காட்சி மூலம் பஞ்சாயத்தில் உள்ள நிலைமை குறித்து கேட்டறியும் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் கமலநாதன் அவர்களிடம் காணொலி காட்சி மூலம் பஞ்சாயத்தில் உள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின். 

அப்போது, கரோனா காலத்தில் பஞ்சாயத்து மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எவ்வாறு உதவி செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார், அதற்கு அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களின் வீடுகளுக்கும் சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணி, அதனைத்தொடர்ந்து ஊராட்சியில் நோய்த்தொற்று எதிர்ப்பு சக்தி கொண்ட நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் ஆகியவை ஊராட்சி முழுவதும் வழங்கப்பட்டது. மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களும் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அனைத்து பகுதிகளும் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

ஒன்றிணைவோம் வா என்னும் திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஊத்தங்கரை மற்றும் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள பயனாளிகளுக்கு அரிசி பருப்பு மளிகை பொருட்கள் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து நல உதவிகள் மற்றும்  பஞ்சாயத்தின் மூலம் ஊராட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் கமலநாதன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் காணொலி காட்சி மூலம் விளக்கினார்.

Leave a Reply