ஊழியருக்கு கரோனா: புதுவை ஆளுநர் மாளிகை இரண்டு நாள்கள் மூடல்

18 views
1 min read
puducherry_governer_house

 

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகை 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. 

ஆளுநர் உள்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதுவரை ஆளுநர் கிரண்பேடி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS
governors-house

Leave a Reply