எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே.அத்வானி

93 views
1 min read
Advani on ram temple boomi pooja

எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என்று ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு குறித்து பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

 

புது தில்லி: எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என்று ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு குறித்து பாஜக மூத்த தலைவர்  எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக அயோத்தியில் நாளை (புதன்கிழமை) பூமிபூஜை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என்று ராமர் கோவில் பூமி பூஜைநிகழ்வு குறித்து பாஜக மூத்த தலைவர்  எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply