என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

15 views
1 min read
ramadoss welcomes govt's decision

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: என்.எல்.சி விபத்தில் மேலும் உயிரிழந்துள்ள 3 பேரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

என்.எல்.சி. விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், ரவிச்சந்திரன், வைத்தியநாதன் ஆகியோா் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. அவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

மூவரின் குடும்பங்களுக்கு என்.எல்.சி நிா்வாகம் தலா ரூ.30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிதியுதவி இவா்களின் குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Leave a Reply