என்.​ஐ.​ஏ.​வால் கைது செய்​யப்​பட்ட முன்​னாள் டிஎஸ்பி மீது குற்​றப்பத்​தி​ரிகை தாக்​கல்

16 views
1 min read

​ஜம்மு:  ஜம்மு காஷ்​மீர் பயங்​க​ர​வா​தி​க​ளுக்கு உத​வி​ய​த​னால் தேசிய புல​னாய்வு முக​மை​யி​னால் (என்.​ஐ.ஏ.) கைது செய்​யப்​பட்ட முன்​னாள் காவல் துணை கண்​கா​ணிப்​பா​ளர் தேவேந்​தர் சிங் உள்​ளிட்ட ஐவ​ருக்கு எதி​ராக குற்​றப் பத்​தி​ரிகை திங்​கள்​கி​ழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

ஜம்மு காஷ்​மீர் மாநி​லம், ஸ்ரீந​கர் விமான நிலை​யத்​தின் சிறப்​புப் பிரி​வில் காவல் துணை கண்​கா​ணிப்​பா​ள​ராக (டிஎஸ்.பி.) பணி​யாற்​றி​ய​வர் தேவேந்​தர் சிங். இவர் இந்​தி​யா​வி​லுள்ள பாகிஸ்​தான் தூத​ரக அதி​கா​ரி​க​ளு​டன் கள்ள உறவு வைத்​துக்​கொண்டு, பாக். ஆத​ரவு பயங்​க​ர​வா​தி​க​ளுக்கு உதவி வந்​தது கண்​ட​றி​யப்​பட்​டது. 

சமூக ஊட​கங்​க​ளில் போலி கணக்​கு​களை வைத்​துக் கொண்டு நாட்டுக்கு எதி​ரான தக​வல்​களை பயங்​க​ர​வா​தி​க​ளுக்கு அவர் கொடுத்து வந்​த​தாக குற்​றம் சாட்டப்​பட்​டது. இதை​ய​டுத்து கடந்த ஜன​வரி மாதம் 12 ஆம் தேதி காஷ்​மீர் பள்​ளத்​தாக்கு பகு​தி​யில் அவர் கைது செய்​யப்​பட்​டார். 

இந்​நி​லை​யில், அந்த வழக்கை விசா​ரித்​து​வ​ரும் என்.​ஐ.ஏ. அவர் மீதான குற்​றப்​பத்​தி​ரி​கையை திங்​கள் கிழமை தாக்​கல் செய்​தது. அவ​ரு​டன் மேலும் ஐந்து பேர் இந்த வழக்​கில் குற்​றம் சாட்டப்​பட்​டுள்​ள​னர். தடை செய்​யப்​பட்ட ஹிஜ்​புல் முஜா​ஹி​தீன் அமைப்​பின் கமாண்​டர் சையத் நவீத் முஸ்​தாக் எனப்​ப​டும் நவீத் பாபு, அவ​ரது சகோ​த​ரர் சையத் இர்ஃ​பான் அக​மது, தலை​ம​றைவு பயங்​க​ர​வாதி இர்ஃ​பான் ஷபி மிர், ஹிஜ்​புல் முஜா​ஹி​தீன் அமைப்​பின் உறுப்​பி​னர் ரஃபி அக​மது ரத்​தர், வியா​பா​ரி​யான தன்​வீர் அக​மது வானி ஆகி​யோரே அந்த ஐவர் ஆவர்.

கைது செய்​த​தி​லி​ருந்து 90 நாட்க​ளுக்​குள் என்.​ஐ.ஏ. குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யா​த​தால், கடந்த மாத இறு​தி​யில்,  தில்லி நீதி​மன்​றம் இவரை பிணை​யில் விடு​விக்க உத்​த​ர​விட்​டி​ருந்​தது. தற்​போது சட்ட விரோத நட​வ​டிக்​கை​கள் தடுப்​புச் சட்டம்  (யுஏ​பிஏ) உள்​பட பல்​வேறு சட்டப் பிரி​வு​க​ளில் தேவேந்​தர் சிங் மற்​றும் ஐவர் மீது குற்​றப் பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

Leave a Reply