எரியோடு அருகே சிறுமி சாவில் மர்மம்: தனிப்படை  விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

18 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_4

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள தொட்டணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் பாலாமணி(13). திண்டுக்கல் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த 27ஆம் தேதி  மாயமான இந்த சிறுமி, மறுநாள் காலை அதே பகுதியிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றி எரியோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் எரியோட்டில் செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  சட்டப்பேரவை முன்னாள்  உறுப்பினர் கே.பாலபாரதி தலைமை வகித்தார். மார்க்சிக்ஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலர் சச்சிதானந்தம், நிர்வாகிகள் முத்துச்சாமி, முனியப்பன்  மற்றும் பொதுமக்கள் என  300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக கே.பாலபாரதி கூறியதாவது:
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடலில் காயங்கள் இருந்துள்ளன. அந்த காயங்களை புகைப்படம்  எடுப்பதற்கு கூட பெற்றோரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. சிறுமி எடுத்துச் சென்ற செல்லிடப்பேசி, அவர் அணிந்திருந்த ஒரு கொலுசு போன்றவை காணவில்லை. இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை. சிறுமியின்  சடலம் மீட்கப்பட்டது முதல் எரியூட்டியது வரையிலுமான விவரங்கள் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்கப்படவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர் தரப்பில் சந்தேகப்படும் நபர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும். இந்த  வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றார்.
 

Leave a Reply