எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி

15 views
1 min read
Ellapuram Regional Medical Officer tests positive for COVID - 19

கோப்புப்படம்

எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவரின் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் மேற்கொண்டு வந்தார். இந்த ஊராட்சிகளில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் பணிகளை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே வட்டார மருத்துவ அலுவலர் பெரியபாளையத்தில் சொந்தமாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் தங்களுக்கும் கரோனா பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

TAGS
coronavirus

Leave a Reply