எல்லை பாதுகாப்புப் படையில் புதிதாக 69 பேருக்கு கரோனா

20 views
1 min read
69 new COVID19 positive cases reported in BSF in the last 24 hours

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 9 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மா தானம் செய்தனர்.

எல்லை பாதுகாப்புப் படையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்ததாவது:

“கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் 29 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது. இதில், 852 பேர் குணமடைந்துள்ளனர். 595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.”

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 9 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மா தானம் செய்தனர்.

TAGS
coronavirus

Leave a Reply