எஸ்பிஐ பெயரில் போலி வங்கி: ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மகன் உள்பட மூவர் கைது

14 views
1 min read
bank

கோப்புப் படம்

கடலூரில் எஸ்பிஐ பெயரில் போலியாக வங்கிக் கிளையை நடத்தி வந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் மகன் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் எஸ்பிஐயின் போலி வங்கி செயல்பட்டு வந்துள்ளது.

போலி வங்கியைத் தொடங்கலாம் என்ற யோசனை, முன்னாள் வங்கி ஊழியர் மகன் கமால் பாபுவுக்கு (19)வந்துள்ளது. இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். தாய் லஷ்மி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்பிஐ வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வேலை இல்லாமல் சுற்றி வந்த கமால் பாபுவுக்கு, போலியாக எஸ்பிஐ வங்கித் தொடங்கலாம் என்று யோசனை வந்து, மூன்று மாதங்களுக்கு முன்பு போலி வங்கியைத் தொடங்கியுள்ளார்.

இது பற்றி எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு சந்தேகம் எழுந்து, அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியின் மேலாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் சோதனை நடத்தியதில், போலி வங்கியில், எஸ்பிஐ வங்கியின் பெயரில் போலியாக செலான், காசோலை, முத்திரைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையடுத்து கமால் பாபு, அவருக்கு உதவியதாக மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

TAGS
hot news

Leave a Reply