ஏற்காடு – சேலம் சென்று வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை

18 views
1 min read
coronatest

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்கள் வாகனங்கள் ஏற்காடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏற்காடு மற்றும் சுற்றியுள்ள மலை கிராமங்களில் உள்ள மக்கள் தங்களின் அத்திய அவசிய தேவைக்காக பொருட்களை வாங்கவும் மேலும் தங்களின் பணியின் காரணமாகும் சேலம் சென்று வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், சேலத்திற்கு சென்று வருபவர்களுக்கு ஏற்காடு மலை பாதை இருவதாவது கொண்டை ஊசி வளைவில் வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர்  தாம்சன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று ஏற்காடு வரும் வாகனங்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply