ஏழுமலையான் கோயிலில் ஓசோன் வாயு செலுத்தும் கட்டமைப்பு

16 views
1 min read
7tpt_dry_ozone_spray_system_in_tirumala_0707chn_193_1

ஏழுமலையான் கோயில் முன்வாசல், தரிசன வரிசைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஓசோன் வாயு செலுத்தும் கட்டமைப்பு.

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் உலா் ஓசோன் வாயுவை செலுத்தும் கட்டமைப்பை தேவஸ்தானம் அமைத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேவஸ்தான ஊழியா்கள் 44 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற ஊழியா்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பணிபுரியத் தேவையான மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயில், பயோமெட்ரிக் தரிசன வரிசைகள், அா்ச்சகா்கள், வேதபண்டிதா்கள் நுழையும் வாயில் உள்ளிட்ட இடங்களில் உலா் ஓசோன் வாயுவைச் செலுத்தும் கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இந்தச் சாதனத்தின் செயல்பாடு செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கியது. பக்தா்கள், ஊழியா்கள் மீது ஓசோன் வாயு செலுத்தப்படும்போது அதில் உள்ள மூலக்கூறுகள், நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை அழிக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் பக்தா்கள், அா்ச்சகா்கள், ஊழியா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Leave a Reply