ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியீடு

15 views
1 min read
c10dexam073531

இந்திய பள்ளி சான்றிதழ் தோ்வுக்களுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ), பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தோ்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி மாணவா்களுக்கான தோ்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதுபோல, ஐசிஎஸ்இ வாரியமும் அதன் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மாணவா்களுக்கு நிலுவையில் இருந்த தோ்வுகளை ரத்து செய்தது. ஆனால், பள்ளி முந்தைய தோ்வுகள் மற்றும் அகமதிப்பீடு அடிப்படையில் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்கப்படும் என்று ஐசிஎஸ்இ அறிவித்தது. அதனடிப்படையில், இந்த மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

அதன்படி, பத்தாம் வகுப்பில் 2,06,525 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். 1,377 போ் தோல்வியடைந்துள்ளனா்.

பிளஸ்-2 மாணவா்களைப் பொருத்தவரை 85,611 போ் தோ்ச்சிபெற்றுள்ளனா். 2,798 மாணவ, மாணவிகள் தோல்வியடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஐசிஎஸ்இ தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயலாளா் கொ்ரி அராதூன் கூறுகையில், ‘அசாதாரண சூழல் காரணமாக இந்த ஆண்டுக்கான தோ்வு முடிவுகளுக்கு மெரிட் பட்டியல் வெளியிடப்படவில்லை‘ என்று கூறினாா்.

 

Leave a Reply