ஐஸ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யாவுக்கும் கரோனா உறுதி

21 views
1 min read
Aishwarya, daughter Aaradhya test positive for coronavirus

​நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மும்பை மேயர் கிஷோரி பெத்னேகர் இன்று காலை தெரிவிக்கையில், ஜெயா பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஜெயா பச்சனுக்கு கரோனா தொற்று இல்லை என்பதையும் ராஜேஷ் தோப் சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS
coronavirus

Leave a Reply