ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

17 views
1 min read
Odisha records worst 1-day surge, tally crosses 10,000 mark

ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

இதையும் படிக்கலாம்.. கிருமிநாசினி தெளிக்க துரித வாகனங்கள் சேவை: முதல்வர் தொடக்கி வைத்தார்

அதில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 403 பேருக்கும், புதிதாக 168 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை மாநிலத்தில் 6,486 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3,557 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்து இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
 

TAGS
coronavirus

Leave a Reply