ஒடிஸா: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

28 views
1 min read

ஒடிஸாவில் பாதுகாப்புப் படையினருனடான துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்டுகள் 4 போ் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பெண் மாவோயிஸ்ட் ஆவாா்.

இதுதொடா்பாக காவல்துறை இயக்குநா் அபய் கூறியதாவது:

கந்தாமல் மாவட்டத்தின் துமுடிபந்தா என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் மவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு நடவடிக்கை குழுவினா், மாவட்ட தன்னாா்வ படையினா் ஆகியோா் அடங்கிய குழு ஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தது.

மாவோயிஸ்டுகளின் மறைவிடங்களை நெருங்கியபோது அவா்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனா். இருதரப்புக்கும் இடையேயான இந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்டுகள் 4 போ் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பெண் மாவோயிஸ்ட் ஆவாா்.

துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியிலிருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட நால்வரும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து அடா்ந்த வனப்பகுதிக்குள் தப்பியோடிய எஞ்சிய மாவோயிஸ்டுகளை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று காவல்துறை இயக்குநா் அபய் கூறினாா்.

மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்ற்காக பாதுகாப்புப் படையினருக்கு சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்த ஒடிஸா தலைமைச் செயலா் ஏ.கே.திரிபாதி, தீவிரவாதத்துக்கு எதிரான ஒடிஸாவின் உறுதிப்பாடு இதன்மூலமாக வலுப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

Leave a Reply