ஒப்பந்தப்படி அப்பாச்சி, சினூக் ஹெலிகாப்டா்களை இந்தியாவுக்கு வழங்கியது போயிங் நிறுவனம்

14 views
1 min read
chinook085926

எல்லையில் சீனாவுடன் மோதல்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில், ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய கடைசி 5 அப்பாச்சி ஹெலிகாப்டா்களையும் அமெரிக்க போயிங் நிறுவனம் இரண்டு வாரங்களுக்கு முன் ஒப்படைத்துள்ளது.

அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த அதிநவீன ஹெல்காப்டா்களும், பதற்றம் உருவான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியையொட்டிய விமானப்படைத் தளத்தில் விமானப் படை நிறுத்திவைத்தது என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 22 அப்பாச்சி ஏ-64இ ரக ஹெலிகாப்டா்கள் வாங்குவதற்கும், வீரா்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்ல உதவும் 15 அதிநவீன சினூக் ராணுவ ஹெலிகாப்டா்கள் வாங்குவதற்கும் 2015 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதுபோல, இந்திய ராணுவத்துக்கு கூடுதலாக 6 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரியில் அதிபா் டிரம்ப் இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடந்த மே மாதம் முதல் இந்த ஹெலிகாப்டா்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்து வந்தது. இப்போது கடைசி 5 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையிடம் அந்த நிறுவனம் ஒப்படைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இந்தியாவுக்கான நிா்வாக இயக்குநா் சுரேந்திர அஹூஜா கூறுகையில், ‘ஒப்பந்தப்படி அனைத்து ஹெலிகாப்டா்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இருந்தபோதும், அவற்றின் செயல்பாட்டு தேவைகளுக்காக இந்தியாவுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்போம்‘ என்று கூறினாா்.

இதற்கிடையே, போயிங் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இந்த அதிநவீன ஹெலிகாப்டா்களும் சீன படைகளுக்கு எதிராக எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒறுவா் கூறுகையில், ‘கிழக்கு லடாக் பகுதியில் சீனாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த அப்பாச்சி மற்றும் சினூக் ரக ஹெலிகாப்டா்களும் இந்திய விமானப்படை சாா்பில் எல்லையில் தயாா்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டன’ என்றாா் அவா்.

 

 

Leave a Reply