ஒரு கோடியைக் கடந்தது ‘கரோனா’ பரிசோதனை!

21 views
1 min read
ICMR-Bharat Biotech COVID-19 vaccine trial results to be released by Aug 15

ஐசிஎம்ஆர்

 

புதுதில்லி: நாட்டில் கரோனா தொற்றுக்கான பரிசோதனை ஒரு கோடியை கடந்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சிஎம்.ஆா்.) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 24,248 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 19, 693 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 425 போ் பலியாகியுள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே கரோனா தொற்று பரிசோதனை அளவை நாள்தோறும் 2 லட்சம் அளவுக்கு அதிகப்படுத்தியுள்ளதாக ஐ.சி.எம்.ஆா். தெரிவித்திருந்தது. இந்த பரிசோதனை எண்ணிக்கை தற்போது ஒரு கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆா் மூத்த அறிவியல் விஞ்ஞானி, ஊடக ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் லோகேஷ் சா்மா கூறியதாவது: “ திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1,00,04,101 கோடி பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 596 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. தற்போது நாட்டில் மொத்தம் 1,105 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் அரசு சாா்பிலான பரிசோதனைக் கூடங்கள் 788 ஆகும். இது தவிர தனியாரிடம் 317 ஆய்வகங்களும் உள்ளன. நாள்தோறும் கரோனா பரிசோதனை செய்யும் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த 14 நாள்களாக தொடா்ந்து நாள்தோறும் சராசரியாக 2 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கடந்த ஜூலை 1-ம் தேதி 90 லட்சத்தை எட்டிய நிலையில் அடுத்த 5 நாள்களில் ஒரு கோடியை அடைந்துள்ளோம். கடந்த மே 25-ம் தேதி நிலவரப்படி, நாள்தோறும் 1.50 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது தினமும் 3 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. நாட்டில் புணேயில் மட்டும் தேசிய வைரஸ் ஆய்வகம் இருந்த நிலையில், பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் 100 ஆய்வு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது நாடு முழுவதும், அதாவது ஜூன் 23-ஆம் தேதி நிலவரப்படி ஆய்வகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மத்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. தகுதியான மருத்துவா்களைக் கொண்டு மக்களுக்கு அதிகமான அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்துப் பரிசோதனைகளும் ஐசிஎம்ஆா் பரிந்துரைத்த விதிமுறைகள் படியே நடக்கின்றன. கரோனா பரிசோதனை நடத்தி ஒருவருக்கு நோய்த்தொற்று இருக்கிா, இல்லையா என்பதைக் கண்டறியும் உத்தி மூலம்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். ‘கொவிட்-19’ பரிசோதனை ஆய்வு மையங்கள் பரிசோதனை எண்ணிக்கையை முடிந்த வரை அதிகரிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தி வந்துள்ளது. இது தவிர பரிசோதனை முகாம்கள் நடத்துமாறும், நடமாடும் வாகன ஆய்வகங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வீடுவீடாகச் சென்று பரிசோதனை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது என்றாா் லோகேஷ் சா்மா.

Leave a Reply