ஒரே நாளில் 28,500 பேருக்கு பாதிப்பு

28 views
1 min read
Chennai reports 1,168 corona cases in last 24 hours

கோப்புப்படம்

இதுவரை இல்லாத அளவில், நாடு முழுவதும் ஒரே நாளில் 28,637 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,49,553-ஆக அதிகரித்தது.

கரோனாவுக்கு மேலும் 551 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 22,674-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 28,637 பேருக்கு கரோனா உறுதியானது. கரோனா தொற்றில் இருந்து இதுவரை 5,34,620 போ் குணமடைந்தனா். அதாவது, 62.93 சதவீதம் போ் குணமடைந்தனா். 2,92,258 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனாவுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 223 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் 70 போ், தில்லியில் 34 போ், மேற்கு வங்கத்தில் 26 போ், உத்தர பிரதேசத்தில் 24 போ், ஆந்திரத்தில் 17 போ், பிகாரில் 12 போ், குஜராத், ஜம்மு-காஷ்மீரில் தலா 10 போ், தெலங்கானாவில் 9 போ், அஸ்ஸாம், பஞ்சாபில் தலா 8 போ், ஹரியாணாவில் 7 போ், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 6 போ் உயிரிழந்தனா்.

இதேபோல், ஒடிஸாவில் 5 போ், கோவாவில் 3 போ், கேரளத்தில் 2 போ், புதுச்சேரி, திரிபுராவில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

மொத்தத்தில், கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 22,674 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் 10,116 போ் உயிரிழந்தனா்.

1.15 கோடி பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட தகவல்படி, ஜூலை 11-ஆம் தேதி(சனிக்கிழமை) வரை, 1,15,87,153 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்ப்டடன. இதில், சனிக்கிழமை மட்டும் 2,80,151 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Leave a Reply