ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ள ஆர்யா படம்!

19 views
1 min read
teddy1

 

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் டெடி படத்தை இயக்கியுள்ளார். இசை – இமான். தயாரிப்பு – ஸ்டூடியோ க்ரீன். ஆர்யாவின் திருமண நாளான மார்ச் 3 அன்று இப்படத்தின் டீசர் வெளியானது.

தமிழில் இதுவரை நேரடியாக வெளியான ஓடிடி படங்கள் எதிலும் பெரிய கதாநாயகர்கள் நடிக்கவில்லை. இந்நிலையில் முதல்முறையாக ஆர்யா போன்ற ஒரு பெரிய நடிகர் நடித்த படமொன்று ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

டெடி படம் அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறியப்படுகிறது.

Leave a Reply