ஓமனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 183 பயணிகள் மதுரை வருகை

15 views
1 min read
flight

 

ஓமன் நாடு மஸ்கட்டிலிருந்து சிறப்பு விமானம் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் 183 பேர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை வந்தனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பொது முடக்கத்தை அறிவித்து வருகின்றனர்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய விமானச் சேவைகளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் தொழிலாளர்களை மீட்கும் விதமாக விமானச் சேவையைத் தொடங்கியது.

அதனடிப்படையில் ஓமன் நாடு மஸ்கட் பகுதியிலிருந்து 183 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து ஏழு நாட்கள் தனிமையில் தங்க அறிவுறுத்தினர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் பயணிகள் அனைவரையும் தனியார் விடுதிகளில் ஏழு நாட்கள் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர். இதில் கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களை வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.

TAGS
சிறப்பு விமானம்

Leave a Reply