ஓமலூர்: தொட்டியநாயக்கர் பெண்களின் வசதிக்காக நியாய விலை கடை திறப்பு

20 views
1 min read
omalur

ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் நியாயவிலை கடையை திறந்துவைத்தார்

 

தொட்டியநாயக்கர் பெண்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள நியாயவிலை கடையை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திறந்துவைத்து ரேஷன் பொருள்களை வழங்கினார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தும்பிபாடி கிராமம் தொட்டிநாய்கனூர் பகுதியைச் சுற்றிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தொட்டிநாய்கர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் குலவழக்கப்படி இளம்வயது பெண்கள் உட்பட நடுத்தர பெண்கள் மற்றும் வயதான பெண்கள் வரை ஜாக்கெட் அணியாமல் இருப்பது வழக்கம். 

இந்நிலையில் அக்காலங்களில் வீட்டை வெட்டு வெளியில் செல்லாமல் இருந்து வந்தனர். ஆனால் தற்பொழுது பல்வேறு இடங்களுக்கு அப்பெண்கள் வெளியில் செல்வது மட்டுமல்லாது ரேஷன்கடைக்கும் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இதானால் ஜாகெட் அணியாமல் ரேஷன்கடைகளுக்கு செல்லும் இளம்பெண்கள் மற்ற பொதுமக்களிடம் பழகுவதற்கு கூச்சமாகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களின் சிரமத்தைப் போக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி தொட்டிநாய்கனூர் பகுதியில் நியாய விலைகடை புதியதாகக் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு ரேசன் பொருட்களை வழங்கி ரேசன்கடையை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ராஜேந்திரன் மற்றும் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

TAGS
Ration Shop

Leave a Reply