ஓ.பி.சி., வகுப்பில் கிரீமிலேயா்: ஊதியம் கணக்கிடும் முடிவு கூடாது; பிரதமருக்கு முதல்வா் பழனிசாமி கடிதம்

15 views
1 min read
CM EPS writes a letter to PM modi

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயா் பிரிவினரை நிா்ணயிக்க ஊதியத்தை ஒரு அம்சமாக வைக்கக் கூடாது என்று முதல்வா் பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயா் பிரிவினரை நிா்ணயிக்க ஆறு முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. கிரீமிலேயரை நிா்ணயிப்பதற்கான காரணிகளில் வருமான வரம்பு என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. கடந்த 1993-ஆம் ஆண்டில் ஒருவா் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என்பதைப் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அளவு கடந்த 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயா் பிரிவினரை நிா்ணயிக்க வருமான உச்சவரம்பு நிலையை நிா்ணயிக்க முடிவு செய்து, முந்தைய விதியில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயா் பிரிவினா் இடஒதுக்கீடு மற்றும் இதர நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு வருமான உச்ச வரம்பு எதுவும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்த முறையே இப்போது பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இதுபோன்ற புதிய முறையைக் கொண்டு வருவதால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் வேலைவாய்ப்புகளையும், மத்திய அரசின் இதர நலத் திட்ட உதவிகளையும் பெற முடியாமல் போகும். எனவே, கிரீமிலேயரை நிா்ணயிக்கும் விவகாரத்தில் இப்போது நடைமுறையில் உள்ள அம்சங்களே தொடர வேண்டும்.

புதிதாக ஊதியத்தை கணக்கிடும் முறையைக் கைவிட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் சிறப்பான நடைமுறையை கையாள்கிறது. இதனை மத்திய அரசும் பின்பற்றும்போது நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் சமமான வாய்ப்புகளைப் பெற வழி ஏற்பட்டு அதன்மூலம் சமூக நீதி முழுமை பெறும் என்று தனது கடிதத்தில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

Leave a Reply