கங்குலி பிறந்த நாள்: குவியும் வாழ்த்துகள்!

21 views
1 min read
SouravGangulyEPS

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி, இன்று தனது 48-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் கங்குலிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

சச்சின் ட்விட்டரில் கூறியதாவது: பிறந்த நாள் வாழ்த்துகள் தாதா. ஆடுகளத்தில் இருந்த நம்முடைய வெற்றிகரமான கூட்டணி, தற்போது வெளியேயும் தொடர விருப்பம். சிறப்பான வருடம் அமைய வாழ்த்துகள் என்றார்.

கங்குலியின் சாதனைகளை வெளியிட்டு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது. 10,000 ஒருநாள் ரன்களை வேகமாக எடுத்த 3-வது வீரர், ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தனி நபராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், 2003 உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர், 28 வெளிநாட்டு டெஸ்டுகளில் இவர் தலைமையில் இந்திய அணி 11 வெற்றிகளைக் கண்டது… இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான கங்குலிக்கு வாழ்த்துகள் என்று ஐசிசி வாழ்த்தியுள்ளது.

விராட் கோலி, விவிஎஸ் லக்‌ஷ்மண், முகமது கயிப், ஆகாஷ் சோப்ரா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட பல வீரர்கள் கங்குலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.a

TAGS
Happy Birthday

Leave a Reply