கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்குத் தொற்று: புதுவையில் பாதிப்பு 1,272 ஆக உயர்வு

23 views
1 min read

puducherry corona victims

 

புதுவையில் இன்று மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதுவையில் ஜூலை 10-ம் தேதி நிலவரப்படி ஒரேநாளில் 72 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், 618 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும் 24 மணி நேரத்தில் ருவர் பலியாகியுள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், அரசு மருத்துவக் கல்லூரியில் 372 பேரும், ஜிப்மரில் 116 பேரும், கரோனா பராமரிப்பு மையத்தில் 73 பேரும், 35 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும், 20 பேர் யானம் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் மாஹே அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை புதுவை மாநிலத்தில் 1,272 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 637 பேர் சிகிச்சை பெற்று வெளியேற்றப்பட்டனர். 17 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS
Coronavirus

Leave a Reply