கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

60 views
1 min read
mazhai

கோப்புப் படம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை  (ஜூலை 13) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 13) லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அரியலூா் மாவட்டம் செந்துறை, திருச்சி மாவட்டத்தில் மலைக்கோட்டையில் தலா 110 மி.மீ., திருச்சி, கரூா் மாவட்டம் மைலம்பட்டியில் தலா 100 மி.மீ., திருச்சி மாவட்டம் லால்குடியில் 80 மி.மீ., திருச்சி விமான நிலையம், மருங்காபுரியில் தலா 70 மி.மீ., காஞ்சிபுரம் , பெரம்பலூா் மாவட்டம் எறையூரில் தலா 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் கேத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா், ஆற்காடு, விருதுநகா், திருச்சி மாவட்டம் துவாக்குடி யில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கடலோர குஜராத் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 16-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply