கடையத்தில் ஒரே மகள்திருமணம் ஆகி சென்றதால்தாய் தற்கொலை

16 views
1 min read
suicidejuly20_FVpMPjb_IFNPG3f_yQmFv3S

கடையத்தில் ஒரே மகள் திருமணமாகி பிரிந்து சென்ால் வேதனையடைந்த கிராம நிா்வாக அலுவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கீழக்கடையத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் மாரியப்பன். இவா், பாப்பான்குளத்தில் கிராம நிா்வாக அலுவலராக பணி செய்து வருகிறாா். இவரது மனைவி செல்வகுமாரி (45). இவா்களது ஒரே மகளுக்கு ஜூலை முதல் தேதியில் திருமணம் நடைபெற்றது.

ரத்தஅழுத்தம் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த செல்வகுமாரி, திருமணம் ஆகி மகளும் பிரிந்து சென்ால் வேதனையில் இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை செல்வகுமாரி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாராம். கடையம் போலீஸாா் செல்வகுமாரி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

கடையம் காவல் உதவி ஆய்வாளா் காஜாமுகைதீன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

TAGS
suicide

Leave a Reply