கட்சியிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

19 views
1 min read
Sasikala has no place in party or regime: Minister Jayakumar

அமைச்சர் ஜெயக்குமார்

கட்சியிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘சசிகலா விவகாரத்தில் ஏற்கெனவே எடுத்த முடிவுதான் நாளையும் தொடரும். அதாவது, சசிகலா இல்லாமல் கட்சியையும், நடத்துவது தான். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் இதேதான். அதிமுகவிலோ, ஆட்சியிலோ அவருக்கு இடமில்லை. அந்த ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம்’ என்று தெரிவித்தார். 

முன்னதாக, இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலாவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவது குறித்து தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியிருந்தார். 

TAGS
சசிகலா

Leave a Reply