கமுதியில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு மரியாதை

18 views
1 min read
rmd

கமுதியில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் திமுக ஆட்சி காலத்தில் இரண்டு முறை பொறுப்பு முதல்வராக இருந்தவர் என திமுக ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்த நாவலர் நெடுஞ்செழியன். இவரது, 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நெடுஞ்செழியன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் கமுதி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி செயலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இல்லத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு அழகுமுத்துக்கோன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

TAGS
Kamuthi Nedunchezhiyan

Leave a Reply