கமுதி அருகே முதுமக்கள் தாழிகள், கற்கால வளையங்கள் கண்டெடுப்பு

14 views
1 min read
மேலக்கொடுமலூரில் விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், வளையங்கள், ஓடுகள், தாதுப் பொருள்கள்.

மேலக்கொடுமலூரில் விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், வளையங்கள், ஓடுகள், தாதுப் பொருள்கள்.

கமுதி: கமுதி அருகே பண்ணைக் குட்டைக்காக தோண்டப்பட்ட குழியில் முதுமக்கள் தாழிகள், இரும்புத் தாதுக்கள், பழைமையான ஓடுகள், கற்காலக் கருவிகள், வளையங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன.

கமுதி அருகே அபிராமத்தை அடுத்துள்ள மேலக்கொடுமலூரைச் சேர்ந்த விவசாயி, கோபால் (58). இவரது நிலத்தில் பண்ணைக் குட்டை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது, பூமிக்கடியில் நூற்றாண்டுகள் பழைமையான 3 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. மேலும் ஓடுகள், வளையங்கள், கற்காலக் கருவிகள், இரும்புத் தாதுக்கள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. 

இதுகுறித்து கமுதி வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி கோபாலின் நிலத்தில் பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளதால் மேலக்கொடுமலூரிலும் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட பழைமையான பொருள்களை பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

 

Leave a Reply