கம்பத்தில் காது கேளாதோர் வாய் பேசாதோருக்கு நிவாரணப் பொருள்கள்

16 views
1 min read
relief

தேனி மாவட்டம் கம்பத்தில் சனிக்கிழமை காதுகேளாதோர், வாய்பேசாதோர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

 

தேனி மாவட்டம் கம்பத்தில் காது கேளாதோர், வாய் பேசாதோர்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சனிக்கிழமை காது கேளாதோர், மற்றும் வாய் பேசாதோர்களுக்கு அரிசி, எண்ணை, மளிகை பொருட்களை டி.எஸ்.கே.பி. ராஜா, பி.ரமேஷ், பி. காமேஷ்  ஆகியோர் வழங்கினார்கள்.

மாவட்டம் முழுவதும் இருந்து 40 பெண்கள், 60 ஆண்கள் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு பயிற்சிகளை நகராட்சி சுகாதார அலுவலர் திருப்பதி செய்கைகள் மூலம் விளக்கமளித்தார்.

TAGS
relief

Leave a Reply