கம்பத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

16 views
1 min read
WhatsApp_Image_2020-07-07_at_3

தேனி மாவட்டம் கம்பத்தில் சத்துணவு பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றிய சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் எஸ்.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சி.குமரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 

பள்ளி குழந்தகளுக்கு மதிய உணவு பொருட்களை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், குழந்தைகளுக்கு உணவு சமைத்துத் தர தயாராக இருப்பதாகவும், கரோனா  காலத்தில் சமூக சமையல் செய்த சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், சத்துணவு துறையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த, மாநில பொருளாளர் பி.பேயத்தேவன் பேசினார். சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

Leave a Reply