கரனோ பரவல்: விருதுநகரில் மூன்று பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு

16 views
1 min read
vnr

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட முத்துராமன் பட்டி மற்றும் அல்லம்பட்டி, ரோசல்பட்டி லட்சுமி நகர் முதலான பகுதிகளில் கருணா தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 31 வரை இப்பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

விருதுநகர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சிவந்திபுரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு ஒருவர் உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதில் கரோனா பாதிப்பு உள்ளவர்களும் கலந்துகொண்டது தெரியவந்தது. 

இதையடுத்து இப்பகுதியில் பலருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முத்துராமன் பட்டியை சேர்ந்த 70 பேர், அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 30 பேர் என மொத்தம் 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து முத்துராமன் பட்டி அல்லம்பட்டி ரோசல்பட்டி லட்சுமி நகர் முதலான பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் ஜூலை 31 வரை பொதுமக்கள் வெளியேறவும் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply