கருங்கல் அருகே ஒப்பந்ததாரர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

28 views
1 min read
bizzare vegetable theft in lucknow

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியில் ஒப்பந்ததாரர் வீட்டில் 15 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பாலப் பள்ளம், மிடாலக்காடு பகுதியைச் சேந்தவர் ஜான் ரோஸ் (50) இவர் கேரள மாநிலத்தில் ஒப்பந்ததாராக பணியாற்றி வருகிறார். இதனால் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். மிடாலக்காட்டில் உள்ள வீட்டை அப்பகுதியில் உள்ள ஒரு பெண் கவனித்து வந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மர்ம நபர்கள் ஜாண் ரோசின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

TAGS
Karangal theft திருட்டு

Leave a Reply