கருப்பன் காளையை யாரும் தொட்டது கூட இல்லை: நடிகர் சூரி பெருமிதம்

17 views
1 min read
soori7171

 

ஜல்லிக்கட்டுப் போட்டியில் எங்களது கருப்பன் காளையை எவரும் தொட்டது கூட இல்லை என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.

சென்னையில் இருந்தபோது தனது குழந்தைகளுடன் சேர்ந்து கரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுப் பாராட்டுகளைப் பெற்றார் நடிகர் சூரி. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். 

ராஜாக்கூரில் உள்ள தனது கருப்பன் என்கிற காளையின் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் சூரி. ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் – எங்க கருப்பன் நடந்து போனா என்று பெருமையுடன் தனது காளையைப் பற்றி எழுதியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: 

கருப்பன் காளை இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது இதுவரை எந்தவொரு வீரரும் கருப்பன் காளையைப் பிடித்ததில்லை. ஏன் தொட்டது கூட இல்லை. பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளது எங்கள் கருப்பன்.

எங்கள் கருப்பன் காளையைப் பராமரிப்பவர்களுக்கும், ஊர் மக்கள் வீட்டில் எதேனும் காதுகுத்து அல்லது திருமண விழா போன்ற விசேஷங்கள் நடக்கும்போதும் போட்டிகளில் வென்ற பரிசுகளை கருப்பன் காளை சார்பாக அளித்து விடுவோம். தற்போது எங்கள் கருப்பன் காளையை எனது தம்பி வினோத் பரமாரித்து வருகிறார் என்றார்.

TAGS
soori

Leave a Reply